ஞாயிறு, 30 நவம்பர், 2008

செங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு, காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

"கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.

செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

"மூன்று கம்பீர புருசர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"
"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."


அப்பப்பா! என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர் சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும், இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

18ஆம் நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து தெரியவருகிறது.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.

இரட்டைப் புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும் செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின் ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும் முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப் புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

அரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.


(பி.கு : இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில் (குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது. இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

லேபிள்கள்: , , , , , , ,

32 கருத்துகள்:

1 பிப்ரவரி, 2009 அன்று 11:41 PM க்கு, Blogger குமரன் (Kumaran) கூறியது…

செங்குந்தர்/கைக்கோளர் பற்றி முன்பு சிறிதே அறிந்திருந்தேன். இன்று நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி சதீஷ்குமார்.

 
23 செப்டம்பர், 2009 அன்று 2:56 PM க்கு, Blogger First Attempt கூறியது…

now only i knew the History of the Sengunthar/Kaikolar. Thanks for that Satheesh. :)

 
5 ஜனவரி, 2010 அன்று 12:23 PM க்கு, Blogger Arulkumar கூறியது…

Thanks for Sharing.. Very informative and useful.. Nice to know more about our community.. :)

 
18 ஜனவரி, 2010 அன்று 8:10 PM க்கு, Blogger Unknown கூறியது…

நம் இனமக்கள் இவ்வளவு வீரத்துடன் வாழ்ந்தது , ஒரு சிலிர்ப்பூட்டும் வரலாறு. கட்டுரை ஆசிரியருக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள். நெஞ்சம் மகிழ்ந்தது...

 
29 நவம்பர், 2010 அன்று 6:06 PM க்கு, Anonymous முதலியார் நல அறக்கட்டளை கூறியது…

மிக நன்று ஆர்வ மிகுதியால் தங்கள் பதிவை அப்படியே நம் தளத்தில் உங்கள் அனுமதி பெறாமல் வெளியிட்டுள்ளேன்....அனுமதிபீர் எனும் நம்பிக்கையில்

 
29 நவம்பர், 2010 அன்று 9:27 PM க்கு, Blogger இரா. சதீஷ் குமார் கூறியது…

மிக்க மகிழ்ச்சி. இங்கு மட்டுமல்ல எங்கிருந்து தகவல்களை எடுத்தாலும் தயவு செய்து அந்த தகவல் உள்ள சுட்டியை குறிப்பிடுவது நல்லது...
சதீஷ்

 
26 டிசம்பர், 2010 அன்று 8:22 PM க்கு, Blogger Unknown கூறியது…

I read some articles in internet about veerasenguntham...
This nicely tells the brave story of red daggers...
Good compilation...
As a Red dagger I thank you and wish you for this work...

 
17 ஜூலை, 2011 அன்று 11:15 PM க்கு, Blogger Mohan ganesh கூறியது…

I AM VERY PROUD TO BE AN SENGUNTHAR AND WE NEED TO CREATE SENGUNDTHAR COMMUNITY. THANK YOU 4R UR INFORMATION AND EXPECT MORE FROM U SATHISH.

 
26 நவம்பர், 2011 அன்று 7:29 PM க்கு, Anonymous senthamizh கூறியது…

IM REALY PROUD TO BIRTH A SENGUNTHAR PLEASE POST MORE INFORMATION OF SENGUNTHAR........ VAZHAGA SENGUTHAM..... VALARGA SENGUNTHAR...

 
30 டிசம்பர், 2011 அன்று 7:55 AM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

நண்பர் சதீஷ்குமார் அவர்களே கைக்கோளப்படையினரே
கைக்கோளர் செங்குந்த வகுப்பினர் தான்
என்பதற்கு சரித்திரத்தில் ஆதாரங்கள்
ஏதும் கிடையாது.படைப்பிரிவினரான
கைக்கோளர் வேறு நெசவினரான
கை கோளர் வேறு.அது படைபிரிவு.
கோளேந்திய வீரர் என்னும் அர்த்தமாகும்.செங்குந்தர் கைக்கோளர் கை
நெசவு எனும் பொருளுடையவர்கள் கோலியர் என பன்னெடுங்காலமாக
அழைக்கப்படும் ஆதி தமிழர்கள்,பறையரில் ஒரு பிரிவான நெசவுப்பறையர் என்ற கோலியப்பறையர்கள் என விஜய நகரப்பேரரசு காலம் வரையிலான
கல்வெட்டு ஆவணங்களின் மூலம்
அறியலாம்.ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனின் மதிப்பைப்பெற்றவர்
அவர் தன் ஜாதியை உயர்த்திப்பாடுவது
வியப்பானதல்ல.
கல்கி வரலாற்றாசிரியரோ ஆய்வாளரோ அல்ல.தங்களைப்போலவே அவரும் பெயர் ஒற்றுமைக்குழப்பத்தில் எழுதியுள்ளார்.வரலாற்றாளர் எவருடைய ஆராய்ச்சி கருத்தேனும் இருந்தால்
அவரும் கைக்கோளராக இல்லாத பட்சத்தில் பட்சத்தில் அவர்களுடைய
ஆதாரங்களோடு பதிவிடுங்கள்.அனைவருக்கும் உதவியாக இருக்கும்.ஆதாரமின்றி
எங்கும் பேச முடியாது நாமாக பெருமைக்கு சொல்லிக்கொள்ளலாம்.

 
17 மார்ச், 2012 அன்று 12:45 PM க்கு, Blogger இரா. சதீஷ் குமார் கூறியது…

நண்பரே,
தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

இது ஒரு முடிவான கட்டுரை அல்ல, கிடைத்த தகவல்களை திரட்டி எழுதியது தான். தேடல் தொடர்கிறது, மாற்று செய்திகள் கிடைத்தால் நிச்சயம் இந்தக் கட்டுரை மாற்றி எழுதப்படும்.

தங்களிடம் இருக்கும் தகவல்களை பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும்.

நன்றி,
சதீஷ்

 
3 ஜூலை, 2012 அன்று 12:24 PM க்கு, Blogger manjaimeigandan கூறியது…

30dec2011ல் வந்த இது போன்ற பதிவு குறித்து சிறிது மகிழ்ச்சி, பதிவர் தன்னை வெளிப்படுத்தி இருந்தால் இன்னும் மகிழ்ச்சி ,கைக்கோளராக இரு ந்தால் பெரிய மகிழ்ச்சி, இரா. சதீஷ் குமார் ரின் எதிர்வினை தருவது மட்டற்ற மகிழ்ச்சி

 
4 டிசம்பர், 2012 அன்று 11:22 PM க்கு, Blogger GOKUL DESIGNS கூறியது…

பா.லோகநாதன் த/பெ, அ.பாலமுருகன் 379/3, மேலன்டை தெரு, காமக்கூர் 606903 ஆரணி தாலுக்கா http://www.kaumaram.com/nucontents.html

 
25 ஜனவரி, 2013 அன்று 7:11 PM க்கு, Anonymous RAM கூறியது…

மிக நன்று ஆர்வ மிகுதியால் தங்கள் பதிவை அப்படியே நம் தளத்தில் உங்கள் அனுமதி பெறாமல் வெளியிட்டுள்ளேன்....அனுமதிபீர் எனும் நம்பிக்கையில்

 
3 மே, 2013 அன்று 12:29 PM க்கு, Anonymous Senai கூறியது…

"கைகொலன்" என்ற பெயரை மரியாதைக்காக முதலியார் என்று வைத்து கொண்டனர்.

 
3 மே, 2013 அன்று 12:38 PM க்கு, Anonymous Senai கூறியது…

முதலியார் ஜம்பம் விளகுன்னைக்கு கேடு. இவர்கள் தங்களை பெருமை படுதிகொல்வதில் சிறந்தவர்கள்.

 
19 ஜூலை, 2013 அன்று 7:33 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

செங்குந்தரில் நிறைய கூட்டங்கள் உண்டு . அதில் அன்னதான சோழன் கூட்டமும் ஒன்று. கூட்டங்கள் ஆண்டாண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒன்று.. சோழப்பேரரசு விரிவடையும்போது போர்க்களத்தில் உள்ள கைகோளப்படை ஒவ்வொரு ஊரிலும் தங்கவைக்கப்பட்டனர். இப்படி தங்கவைக்கப்பட்ட படைகளில் இருந்தவர்களே 18 ஆம் நூற்றாண்டுகளில் போர் புரியாத மற்ற நேரங்களில் நெசவுத்தொழிலுக்கு மாறினார். ஏனெனில் சோழன் தான் கைப்பற்றிய நிலங்களில் நிலக்கிழார்களை அமர்த்திவிட்டு அடுத்தடுத்து பகுதிகளை கைப்பற்றவும் தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தவும் முனைப்பு காட்டியுள்ளான். இப்படி கூட்டம் கூட்டமாக வாழ்ந்தவர்களுக்கு கூட்டத்தின் பெயர் வைக்கப்பட்டது அவர்களை போருக்கு அழைக்கையில் அடையாளம் கண்டு அழைக்க... எனவே செங்குந்தர்கள் சோழர் படை வீரர்களே....!

- என் வீட்டு பெரியோர் வாய்மொழியாக கேட்டது.
மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும்

-- முதலியார் ஜம்பம் ... இது முதலிக்கு மட்டுமல்ல... அனைத்து சமூகத்திலும் உண்டு... அனைத்து சமூகத்திலும் அவர்களை கேலி செய்ய நகைச்சுவையான வாக்கியங்கள் உண்டு...

 
15 மார்ச், 2014 அன்று 1:23 AM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

எல்லாருக்கும் வணக்கம். என்னுடைய ஜாதி சான்றிதழிலும் செங்குந்தர் என குறிப்பிடபட்டு உள்ளேன். எங்களை பெரிய தாலி முதலியார் என அழைக்கின்றனர்.நாங்கள் நாமக்கல், சேலம், மற்றும் வடக்கு ஈரோடு பகுதிகளில் வசிக்கின்றோம். இதே போல இந்த பகுதிகளில் சென்னிமலை முதலியார், திருச்செங்கோடு முதலியார் என சில வகையறாக்கள் வசிக்கின்றனர். ivargal சிறு தாலி முதலியார் எனபடுகின்றனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் திருமணக் கலப்பு செய்து கொள்வதில்லை. என்னுடைய கேள்வி என்னவெனில் செங்குந்தர் koottam என்று சொல்லும் 72 பிரிவுகளிலும் எங்கள் யாரை பற்றியும் குறிப்பு இல்லை. உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லலாம் . (எவ்வளவு கேவலமாக இருந்தாலும்)

 
14 ஜூலை, 2014 அன்று 10:52 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

முதல் இரா. சதீஷ் குமார் நன்றி மேல் உள்ள அனைத்து பதிவுகளும் (comment) ஆரோகியமான் உரையாடல்

 
23 ஆகஸ்ட், 2014 அன்று 10:08 PM க்கு, Anonymous arun. tiruppur கூறியது…

சாதி இரண்டு தான் வேறு ஒன்று ம் இல்லை

 
5 அக்டோபர், 2015 அன்று 6:11 PM க்கு, Blogger Uday கூறியது…

//Anonymous said...
கைக்கோளர் செங்குந்த வகுப்பினர் தான்
என்பதற்கு சரித்திரத்தில் ஆதாரங்கள்
ஏதும் கிடையாது.படைப்பிரிவினரான
கைக்கோளர் வேறு நெசவினரான
கை கோளர் வேறு.அது படைபிரிவு.
கோளேந்திய வீரர் என்னும் அர்த்தமாகும்.செங்குந்தர் கைக்கோளர் கை
நெசவு எனும் பொருளுடையவர்கள் கோலியர் என பன்னெடுங்காலமாக
அழைக்கப்படும் ஆதி தமிழர்கள்,பறையரில் ஒரு பிரிவான நெசவுப்பறையர் என்ற கோலியப்பறையர்கள் என விஜய நகரப்பேரரசு காலம் வரையிலான
கல்வெட்டு ஆவணங்களின் மூலம்
அறியலாம்.

அனானிமசு அவர்களே,
திவாகர நிகண்டில் நெசவுத் தொழில் செய்த கைக்கொளரே செங்குந்த படை வீரராகவும் சேனைத் தலைவராகவும் இருந்ததற்கு சான்று உள்ளது

"செங்குந்தப் படையர் சேனைத் தலைவர்
தந்துவாயர் காருகர் கைக்கோளர்"


கைக்கோளர் கோழியர் வழித்தோன்றல் என்பதற்கு ஒரு சான்று தாருங்கள் பார்ப்போம்.

 
5 அக்டோபர், 2015 அன்று 6:21 PM க்கு, Blogger Uday கூறியது…

திவாகர நிகண்டு எழுதிய சேந்தனார் கைக்கோளர் என்பதற்கு ஆதாரம் இல்லை. அவர் கூற்றை ஏற்கலாம்.

 
5 அக்டோபர், 2015 அன்று 6:36 PM க்கு, Blogger Uday கூறியது…

//என்னுடைய கேள்வி என்னவெனில் செங்குந்தர் koottam என்று சொல்லும் 72 பிரிவுகளிலும் எங்கள் யாரை பற்றியும் குறிப்பு இல்லை. உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லலாம் . (எவ்வளவு கேவலமாக இருந்தாலும்)

முன்னாட்களில் 72 கைக்கோளர் நாடுகள் (அ) தேசங்கள் இருந்தன. அவை ஊர் சார்ந்த பெயர்களாக இருக்கும். இவை கூட்டம் அல்ல. வட தமிழகத்தில் கூட்டப் பெயர்கள் பல ஊர் சார்ந்த இருப்பதில்லை. கூட்டம் என்பது ஒரு மூதாதையர் வழியாக வருவது. ஒரே கூட்டத்தில் பெண் கொடுக்க/எடுக்க மாட்டார்.

தற்போது வெவ்வேறு பகுதலில் வாழும் கைக்கோளர் ஒவ்வொரு பகுதிலும் பல கூட்டங்களாக உள்ளனர். பனப்பாக்க முதலியார் எனப்படுவோரில் சில கூட்டங்கள் உள்ளன. வேலூருக்கு வடக்கே உள்ளே பள்ளிப்பட்டு வட்ட முதலியார் பல கூட்டங்களாக உள்ளனர். வேலூர்/குடியாத்தம் முதலியார் பல கூட்டங்களாக உள்ளனர். காஞ்சி முதளியரில் நிறைய கூடங்கள் உள்ளன. வட தமிழகத்தில் இப்படி வெவ்வேறு பிரிவுகளாக இருந்து ஒருவருக்கொருவர் திருமணக் கலப்பு செய்து கொள்வதில்லை.

 
5 அக்டோபர், 2015 அன்று 7:02 PM க்கு, Blogger Uday கூறியது…

//Senai said...
"கைகொலன்" என்ற பெயரை மரியாதைக்காக முதலியார் என்று வைத்து கொண்டனர்.

முதலியார் என்ற பட்டம் கைக்கோளருக்கு இடைக் கால சோழர் காலத்தில் தங்கள் வீரத்தை போற்றி வழங்கப்பட்ட பட்டமாகும்.

From the Diary of Ananda Ranga Pillai, a historian

It is customary for Kaikkolars to use Mudali title after their personal name. In Pondicherry there were many weaver families in the 18th century. Since each caste was represented by two head-men known as nattars, the weavers also were required to select two head-men. Since there was dispute in selecting these two-headmen, the chief dubash of that time Ananda Ranga Pillai was requested by the Governer of Pondicherry to select the two head-men.

The two head-men selected were Muttu Mudali and Ana Nayakka Mudali both from Kaikkolar caste. From this we understand that Mudali surname was used by Sengunthars as early as 1750 AD.

No. 122.
(A. R. No. 497 of 1921).
Tiruvennainallur, Tirukkoyilur Taluk, South Arcot District.
On the East wall of the mandapa in the front of the central shrine in the Vaikuntha-Perumal temple.
In this inscription, dated in the 8th year, Kopperujingadeva is given the surname Alagiyasiyan. It records a gift of 5 cows by Tirumalaiy-Alagiyan alias Vira[gal*] virap-Pallavaraiyan[26], a Kaikkola-mudali of Tiruvennainallur for supplying daily milk by the measure ‘Arumolideva-nali’ to the god Vaikunda (Vaikuntha) [p-Perumal]. This donor figures in A.D. 1237[27] and his death is referred to in No. 189 below. From the title Alagiyasiyan given to the chief, he may be identified with the elder Kopperunjinga.

 
3 நவம்பர், 2015 அன்று 11:06 AM க்கு, Blogger Unknown கூறியது…

அனானிமசு அவர்களே,
நண்பரே, செங்குநர்கள் கோலிப்பறையர் என்பதற்கு ஆதாரம் இல்லை. அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை.கைக்கோளர்கள் செங்குந்தர்கள் எல்லாம் ஒன்றே.கைக்கோளர்களுக்கு நெசவு குலத் தொழில் இல்லை. அவர்கள் படை வீரர்கள், வேளாளர் மரபில் ஒரு பிரிவினரே. அக்காலத்தில் செங்குந்தர்கள் வீரத்தில் மட்டும் இல்லாமல், புலவர்களாகவும் இருந்துள்ளனர். 63 நாயன்மார்களில் 6 பேர் செங்குந்தர் குலத்தை சேர்ந்தவர்கள். அதில் 3 பேர் குறு நில மன்னர்கள், 2 நாயன்மார்கள் அந்தணரா, செங்குந்தரா என்று உறுதி செய்யப்படவில்லை. அப்படி செங்குந்தர்கள் அந்தணர்களுக்கு இணையானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர். ஒரு பறையர் குலத்தை சேர்ந்தவர் எப்படி மன்னர்களாகவும், நாயன்மார்களாகவும் இருந்திருக்க முடியும். கண்ணப்ப நாயனார் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்தான். ஆனால் ஒரு நாயன்மார் தாழ்த்தப்பட்டவராக இருந்ததுக்கே இன்றளவிலும் கண்ணப்ப நாயனார் போற்றி புகழப்படுகிறார் என்றால் 6 நாயன்மார்கள் இருந்தால் வரலாறு அவ்வளவு எளிதில் மறந்திருக்குமா அல்லது மறைக்க முடியுமா. படைத்தொழிலை செய்தவர்கள் வேறு தொழிலுக்கு மாறினால் அதுவே அவர்களது குலத் தொழில் ஆகி விடுமா. எழுத்தாளர் கல்கி போன்றவர்கள் ஆராய்ச்சியாளர்களாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு எழுத்தாளர் எதையும் ஆராய்ச்சி செய்யாமல் வரலாற்று சிறப்புமிக்க நாவலை எழுதி இருக்க முடியாது. எழுத்தாளர் ஜெயமோகன் கூட கைக்கோள முதலியாரைப் பற்றி கூறும்போது படைத்தொழில் செய்தவர்கள் இன்று சாதராண நெசவாளர்ளாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். அதுமட்டும் இல்லாமல் திருவண்ணாமலை கோயிலில் கல்வெட்டுகளிலும் கைக்கோளர், செங்குந்தரை பற்றிய குறிப்புகள் உள்ளது. திருவரங்கம், திருவண்ணாமலை, திருப்பதி, திருச்செந்தூர் இப்படி எத்தனையோ கோயில்களிலும் செங்குந்தர்களுக்கு முறை உள்ளது. காலம் தொட்டு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. எங்காவது பறையர்களுக்கு முறை உள்ளதா. சிலரது கூற்றுப்படி பறையர்கள், பள்ளர்கள் ஆதிக்க சக்திகளாக இருந்தனர் என்பதுக்கு ஆதாரம் இல்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் ஒரு சமூகத்தை தாழ்த்தி பதிவிடுவது முறையில்லை. இது என் குழந்தைக்கு நீங்கள்தான் அப்பன் என்பதற்கு சமம். இது என் மனைவியை தாழ்த்தி பேசுவதற்கு சமம்.

 
12 நவம்பர், 2015 அன்று 1:49 PM க்கு, Blogger Uday கூறியது…

சரவணன் கவிதா அவர்களே,

தங்கள் பதிவில் உள்ள "செங்குநர்கள் கோலிப்பறையர் என்பதற்கு ஆதாரம் இல்லை. அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை.கைக்கோளர்கள் செங்குந்தர்கள் எல்லாம் ஒன்றே ". இவை மட்டுமே உண்மை.


கைக்கோளர் கோலியரின் வழித்தோன்றல் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் கோலியர், கம்மாளர், அகம்படியர், வல்லாம்பர், கைக்கோளர் உட்பட மரபினர் நாகர் இனத்தின் கிளைகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கு திடமான ஆதாரம் இல்லை .

தங்களுடைய கருத்திலிருந்து நான் வேறுபடுவது பின்வருமாறு
கைக்கோளரின் முதன்மை தொழில் நெசவும் கூட. சுமார் 350 ஆண்டுகள்(850-1200) கைக்கோளர் சோழர் படையில் இருந்தனர். முதற்கால சோழர் காலத்தில் கைக்கோளர் பற்றிய உறுதியான தகவல் எதுவும் இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே கைக்கோள மரபு நெசவுத் தொழில் செய்ததற்கு ஆதாரமாக திவாகர நிகண்டின் வாக்கியம் உள்ளது. அதில் கைக்கோள மரபினர் செங்குந்தராகுவும், சேனைத்தலைவராகவும் நெசவாளராகவும் இருந்தனர் என்ற கூற்று உள்ளது.


நாயன்மாரில் எவரும் கைக்கோளர் மரபினர் என்று திருத்தொண்டர் தொகையும் பெரியபுராணமும் கூறியதில்லை. புகழேந்தி புலவர் எழுதிய திருக்கை வழக்கம் சில நாயன்மார்களை செங்குந்தர் மரபினர் என்று கூறுகிறது. அனால் இந்நூல் முற்கூறிய இரு நூட்களைக் காட்டிலும் காலத்தால் பிந்தியது. ஆகவே, மரபறியா நாயன்மார்களாக கூறப்பட்ட தண்டியடிகள் நாயன்மார் மற்றும் கணம்புல்ல நாயன்மார் கைக்கோளர் மரபினர் என்று திருக்கை வழக்கம் கூறவது போல இருக்கலாம். அனால் மற்ற மரபினரான கூற்றுவ நாயனார் (களப்பிரர் மரபு), பெருமிழலைக் குறும்ப நாயனார் (குறும்பர்), சிறுத்தொண்டர் (மாமாத்திரர் (எ) அம்பட்டர்), நேச நாயனார் (சாலியர்), காரி(பிராமணர்), நரசிங்க முனையரையர்(முனையர் மரபு) கைக்கோளர் மரபில் பிறந்தவர் கிடையாது.

அதே போல் வேட்டுவர் மரபில் பிறந்த கண்ணப்ப நாயனார் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவரா என்பது விவாதத்திற்குரியது. நந்தனார் நாயனார் தாழ்த்தப்பட்ட புலையர் (எ) பறையர் மரபில் பிறந்தார். இம்மரபானது ஆரியர் வருகைக்கு முன் தாழ்த்தப்பட்டது இல்லை.

 
16 மே, 2018 அன்று 5:32 PM க்கு, Blogger Unknown கூறியது…

Senai= செந்நாய்=செம்மை+நாய்
சரியான நாய்ப் பரம்பரை என்பது அர்த்தம்.

பிறரை நக்கிப் பிழைப்பதில் சிறந்தவர்கள்.

 
16 மே, 2018 அன்று 5:47 PM க்கு, Blogger Unknown கூறியது…

அருமை!
வாழ்க செங்குந்தம்.

 
28 ஜூலை, 2018 அன்று 8:37 AM க்கு, Blogger செங்குந்தன் கூறியது…

பகுத்தறிவு - பாதி + அறிவு , பகுத்தறிவு என்பது அரைவேக்காடு, சரியாக சொன்னால் முட்டாள், தீண்டதகாதவர்

 
19 ஆகஸ்ட், 2018 அன்று 10:35 AM க்கு, Blogger Unknown கூறியது…

தங்கள் கட்டுரை மிக சிறப்பாக உள்ளது.வரலாறு அறிந்ததால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களின் கட்டுரையில் ஓரிடத்தில் " சிறந்த வீரர்களை பொறுக்கி எடுத்து என்று குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கு பதிலாக" தேர்ந்தெடுத்து" என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன். குறையாக எண்ணவேண்டாம். தகவல்கள் சிறப்பு, நன்றி!

 
29 டிசம்பர், 2018 அன்று 8:44 AM க்கு, Blogger Unknown கூறியது…

திவாரக நிகண்டு,

செங்குந்தப் படையர்சேனைத் தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்
என்ற சூத்திரத்தின் மூலம் அகம்படிகளான கைக்கோளர் சேனாதிபதி பதவியை அடையலாம் என்பதை அறிய முடிகின்றது.மேலும் கைக்கோளர் குறிஞ்சி நாட்டார் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் இவர்கள் குறிஞ்சி நில அகம்படிகளாகலாம்
செங்குந்தர்கள் சிறந்த வீரர்கள் என்பது

"சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே"

"சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே" என்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.

 
16 பிப்ரவரி, 2019 அன்று 5:44 PM க்கு, Blogger தாய்மடி கூறியது…

சில பிழைகள் இருப்பினும் தகவல்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்... பின்னூட்டமிட்ட உதய்குணார் அவர்களுக்கும் மிக்க நன்றி !

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு