திங்கள், 12 ஜனவரி, 2009

பொங்கலோ பொங்கல்....

தைத் திங்கள் பிறந்தாச்சு
தமிழ் புத்தாண்டும் மலர்ந்தாச்சு
அகப் புறத் தூய்மையோடு
அன்பு கொண்ட சுற்றத்தோடு
மஞ்சள் கரும்பு கிழங்கோடு
புத்தரிசி வெல்லமோடு
புதுப்பானையில் பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல் எனக்கூவி
வணங்கிடுவோம் ஆதவனை
வாழ்த்திடுவோம் இயற்கைதனை
அன்பு நிறைந்த ஆனிரைகளை
ஆதரித்து மகிழ்ந்திடுவோம்
அதன் அன்புதனை போற்றிடுவோம்

தமிழ் புத்தாண்டு மலரும் நாளில்
தமிழ்த் தாயை போற்றிப் பாடி
திக்கெட்டும் தமிழ் பரவ
திரண்டிடுவோம் பாடு பட
....


மாட்டு பொங்கல் என்று தலைப்பிடப்பட்ட திருவையாறு ஐயாறப்பர் ஆலய ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்காக. இதில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ, திருநெய்த்தானம் ஆலயத்தில் மக்களுக்கும் மன்னருக்கும் முன்னே பசுக்களும் கன்றுகளும் பசுபதியை வணங்கும் காட்சி. அதன் கண்களில் உள்ள மகிழ்ச்சியை பார்க்கத் தவறாதீர்!


அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

லேபிள்கள்: , , ,

1 கருத்துகள்:

13 ஜனவரி, 2009 அன்று 5:20 AM க்கு, Blogger Vijay கூறியது…

hi satheesh

nice picture. see the order - king is in the last, before him common man and first our bovine friends

rgds
vj

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு