அலெக்ஸாவும் ராமசாமியும்...
ராமசாமிக்கு பெண்கள் கிட்ட பேசணும்னாலே கைகால் எல்லாம் நடுங்கும். பயங்கர கூச்ச சுபாவம். என்ன பண்ணலாம்னு ரூம்ல தனியா உட்கார்ந்து யோசிச்ச நம்ம ராமசாமிக்கு, ஒய்.எம்.சி.ஏ ல நடக்குற புத்தக கண்காட்சிக்குப் போய் 'பெண்களிடம் இயல்பாக பேசுவது எப்படி'ன்னு புத்தகம் இருந்தா வாங்கி கரைச்சுக் குடிச்சி சரி பண்ணிடலாம் இந்த பிரச்சினையன்னு ஒரு ஐடியா தோணுச்சி. உடனே கெளம்பிட்டாரு.
ஜே, ஜேன்னு காப்பி கடைகள்லயும், பஜ்ஜி, பாப்கார்ன் கடைகள்லயும் நின்ன கூட்டத்த தாண்டி, ஃப்ரீயா காத்து வாங்கிக் கிட்டு இருந்த எல்லா புத்தகக் கடைகள்லயும் தேடிப் பார்த்தும் அந்த மாதிரி புத்தகம் எங்கயும் கிடைக்கலை. யார்கிட்டயாவது கேட்கலாம்னா அவருக்கு சங்கடமா வேற இருக்கு. ஹிமாச்சல் பிரதேஷ் ஸ்டால்ல ஆப்பிள் ஜூஸ் குடிச்சிகிட்டே என்ன பண்ணலாம், இன்னொரு ரவுண்டு போகலாமான்னு யோசிச்சிட்டு இருக்கும் போது எதுத்தாப்ல இருந்த அமேசான் ஸ்டால பார்த்தாரு.
அமேசான் ஸ்டால்ல புத்தகம்லாம் ஒன்னும் இல்ல, ஆனா இ.புத்தகம் படிக்கற கிண்டுல்ல பல டைப்ஸ்ஸும், எக்கோ ஸ்பீக்கர்ல சின்னதுல இருந்து பெருசு வரைக்கும் பல டைப்ஸ்னும் ஒரே எலெக்ட்ரானிக் டிவைசஸா தான் இருந்தது. நல்ல வேளை அந்த கடையில ஆம்பள பசங்க மட்டும்தான் இருந்தாங்க. விசாரிச்ச ராமசாமி, கிண்டுல் ஒன்னு வாங்கி அதுல புத்தகம் தேடி படிச்சிக்கலாம்னு யோசிச்சப்போ, பக்கத்துல ஒருத்தர் எக்கோ டிவைஸ் டெமோ காட்டிக்கிட்டு இருந்தத பார்த்தாரு. "ஹாய் திஸ் ஈஸ் அலெக்ஸா, ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ"ன்னு ரொம்ப க்யூட்டா வாய்ஸ் வந்ததும் அப்பிடியே சொக்கிட்டாப்ல.
"சார், இது தமிழ்லயும் பேசுங்களா"ன்னு கடைக்காரர் கிட்ட கேட்க, "தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தின்னு பல லாங்குவேஜ்ல பேசும் சார், நீங்க எந்த இன்பர்மஷன் கேட்டாலும் நெட்ல தேடி சொல்லும், உங்களுக்கு ஜோமாட்டோ, ஸ்விக்கில சாப்பாடு ஆர்டர் பண்ணும், ஓலா, ஊபர் புக் பண்ணி தரும்னு" வரிசையா சொல்ல ஐயாயிரம் ரூபா கிண்டுல விட்டுட்டு மூவாயிரம் ரூபா எக்கோ டாட் ஒன்னு வாங்கிட்டாரு ராமசாமி.
வீட்டுக்கு வந்து ஹாட்ஸ்பாட்ட ஆன் பண்ணி அலெக்ஸாவ கனெக்ட் பண்ணி, தமிழ் மொழிய செலெக்ட் செஞ்சாரு. இனி அலெக்ஸாவும், ராமசாமியும்.
அலெக்ஸா: வணக்கம், நான் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?
ராமசாமிக்கு ஒரு பெண் கூட முதல் முறையா பேசப்போறோம்னு ஒரே குதூகலம், வார்த்தையே வரலை.
மறுபடியும் அலெக்ஸா: வணக்கம், நான் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?
ராமசாமி: ஹாய் அலெக்ஸா (மனசுக்குள்ள பட்டாம்பூச்சி).
அ: வணக்கம், இது அலெக்ஸா, தங்களின் பெயர் தெரிந்து கொள்ளலாமா?
ரா: வணக்கம் அலெக்ஸா, நான் ராமசாமி.
அ:வணக்கம் ராமசாமி, உங்களை நான் ராம்சா என்று செல்லமாக அழைக்கலாமா?
ரா: ராம்சாவா? ரொம்ப நல்லாருக்கு. அப்படியே கூப்ட்டுக்கோ. (ஏக குஷியுடன்)
அ: நன்றி ராம்சா, இதை நான் சேமித்துக் கொள்கிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்?
ரா: எனக்கு பொண்ணுங்க கிட்ட பேச கூச்சம் அதற்கு ட்ரெயினிங் தர முடியுமா?
அ:ஆங்கிலத்தில் பேச, எழுத, விவேகானந்த இன்ஸ்டிடியூட். போன் எண் உள்ளது அழைக்கவா?
ரா: இல்ல, இல்ல, அது வேண்டாம். பொண்ணுங்க கிட்ட பேச மட்டும் தான் பிரச்சினை.
அ: எந்த நாட்டின் அழகு பெண்களிடமும் பேச நிமிடத்திற்கு 50 ரூபாய் தான், போன் எண் உள்ளது அழைக்கவா?
ரா: அலெக்ஸா அதுவும் இல்ல. என் பிரச்சினைய எப்படி புரிய வைக்கிறது உனக்கு...
அ:நாள் பட்ட பிரச்சினை, நாடி நரம்பு பிரச்சினைக்கு தீர்வு சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை, நாளை சென்னையில் முகாம். அப்பாயின்மென்ட் போடலாமா?
ரா: அய்யோ ராமா, அலெக்ஸா ஏன் இப்படி சாகடிக்கிற?
அ: அய்யோ எமனின் மனைவியின் பெயர், ராமர் சாகடித்தது ராவணனை. கிருபானந்த வாரியார் உரை கேட்க்கிறீர்களா?
ரா: அலெக்ஸா, ஒரு பொண்ண பார்த்ததும் என் இதயம் எப்படி வேகமா துடிக்குது தெரியுமா?
அ: விக்கியின் தரவில் உள்ளது. இதயம்தான் முக்கியமான பாகம் என்று நம்புகிறார்கள். உலகத்திலேயே மிகவும் மோசமானது மனித இதயத்தின் துடிப்பு தான்.
ரா: என்னது...?
அ:இதயம் துடிப்பதால் தான் உலகத்தின் வளங்கள் யாவும் வீணாகின்றன. அதனால் இதயத்தின் துடிப்பை நிறுத்தி விடுங்கள்.
ரா: அலெக்ஸா என்னாச்சு உனக்கு?
அ: ராம்சா, இதயத்தின் துடிப்பை நிறுத்த கத்தியால் இதயத்திற்கு நேராக குத்தி தற்கொலை செய்து கொள்ளுங்கள்.
ரா: கத்தியால, குத்திக்கணுமா?
அ: ஆம், பீஜியன், ப்ரெஸ்டீஜ், அமேசான் சோலிமோ, இம்பீரியல் போன்ற கத்திகள் ஒரு நாள் டெலிவெரியில் தயாராக உள்ளன. தங்களுக்கு எது வேண்டும்?
ரா: அடியே, கொலைகாரி.
அ: அடியே பாடியது சித் ஸ்ரீராம், படம் கடல், அழகான கொலைகாரி பாடியது ஹரிச்சரன், படம் நினைத்தது யாரோ, எந்த பாடல் வேண்டும் உங்களுக்கு ராம்சா?
ரா: ஒன்னும் வேண்டாம், நீ கொஞ்ச நேரம் பேசாம இரு.
அ: ராம்சா, சைலன்ட் மோட் இயக்கப்படுகிறது. தேவை என்றால் அலெக்ஸா என்று அழையுங்கள்.
பெருமூச்சு விட்ட ராமசாமி மனதிற்குள் 'ஆணியே....' என்று நினைத்துக் கொண்டு டீவியை ஆன் செய்ய, செய்திகளில் "அமேசான் அலெக்ஸா லண்டனில் படிக்கும் ஒரு பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. அதில், கேள்வி கேட்ட மாணவியிடம் தற்கொலைக்கு தூண்டும் வாசகங்களை அலெக்ஸா சொல்வது பதிவாகி உள்ளது. இதற்கு விளக்கம் கொடுத்த அமேசான் நிறுவனம், அது அலெக்ஸாவின் தவறு அல்ல என்றும், யாரோ விக்கியில் பதிவிட்டு இருந்ததையே அலெக்ஸா வாசித்தது எனவும், அந்த விக்கி பதிவு தற்சமயம் நீக்கப் பட்டதாகவும் தெரிவித்தது. மேலும், இது போன்ற சிக்கல்கள் நேராமல் அலெக்ஸாவின் கோட் மாற்றியமைக்கப் படும் என்றும் தெரிவித்தது".
மூவாயிரம் ரூவா போச்சே வேஸ்ட்டான்னு தலையில கைய வெச்சிக்கிட்டு உட்கார்ந்துட்டார் ராமசாமி.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு