மார்கழி பருவம்
சும்மா இழுத்து போத்திக்கிட்டா சொகம்மா தூக்கம் வர்ற மாசம்தாங்க இந்த மார்கழி. ஆனா பாருங்க பருவ மாற்றத்துக்கு தகுந்தாப்ல வயசுக்கு வயசு இந்த மாசத்துல நம்மோட நடத்தையும் மாறிக்கிட்டே இருக்கும். எப்படி?
நம்ம தாத்தா நட்ட நடுராத்திரியில அதாவது விடியற்காலைல எழுந்து குளிச்சு முடிச்சி பட்டையையோ இல்ல நாமத்தையோ போட்டுக் கிட்டு சிவசிவானும், நாராயணானும் பஜன்க்கு கெளம்பறப்போ மொத நாள் ராத்திரியே "தாத்தா, என்னை மறக்காம எழுப்பிக் கூட்டிட்டு போகனும்"னு வெகு ஆர்வத்தோட சொல்லிட்டு படுக்கற அதே பையன், "இந்த கெழவர்க்கு வேற வேலையில்ல"னு சொல்லிட்டு இழுத்து போர்த்தி தூங்கறதும், ஊர் எழுந்திரிக்கறதுக்கு முன்னாலையே குளிச்சி பவுடர் பூசி பூசணிப்பூ கோலம் போடற புஷ்பாவ பார்க்க ஓடறதும், ஊருக்கு முன்னால பஜன் பஜன் காதல் பஜன் செய்னு கோயிலுக்கு போய் தரிசனம் தேடறதும், கல்யாணம் ஆனப் புதுசுல பூசைக்கு ரெடியாகற புதுப் பெண்டாட்டிய இழுத்துப் போர்த்தி தூங்கறதும், அப்புறம் சில வருஷம் தனியா போர்வைய இழுத்து போர்த்தி தூங்கினப்புறம் திடீர்னு ஒரு ஞானோதயம் வந்து அலாரம் வச்சி அது அடிக்கறதுக்கு முன்னாடியே எழுந்து அதை மண்டைல ஒரு தட்டுதட்டி நடுநடுங்க தண்ணிய ஊத்திக்கிட்டு நாமத்தையோ பட்டையையோ போட்டுக்கிட்டு தெருத்தெருவா நாராயணா, ஹரஹர மஹாதேவானு சொல்லிக்கிட்டே ஓட அடுத்த தலைமுறை மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிச்ச சொகம்லாம் இன்னும் இருக்கற எடம் தானய்யா சொர்க்கம்.
ஹேப்பி மார்கழி...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு