புதன், 28 ஜனவரி, 2009

இனிமையான இறைவன் - வெண்ணிக் கரும்பர் எனும் கரும்பீசுவரர்

தஞ்சையிலிருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ளது கோவில்வெண்ணி என்றழைக்கப் படும் திருவெண்ணியூர். இந்த ஊரின் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ இடது பக்கமாக செல்லும் சாலையில் சென்றால் அய்யனார் கோவில் ஒன்று இருக்கும் அதனை கடந்து சிறிது தூரத்தில் தாமரைத் தடாகத்தின் அருகே அமைந்துள்ளது அழகிய நாயகி உடனுறை வெண்ணிக் கரும்பர் ஆலயம். இது தற்போது சௌந்தராம்பிகை உடனுறை கரும்பீசுவரர் ஆலயம் என்றழைக்கப்படுகிறது.

வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே


என்று நாவுக்கரசரும்

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.


என்று இறைவனின் செல்லப் பிள்ளை சம்பந்தரும் பாடி காதலாகி கண்ணீர் மல்கி தொழுது வணங்கிய கரும்பீசரை நாம் காண கண்கோடி வேண்டுமே!


உருவாகிக் கொண்டிருக்கும் கோபுரம்

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.

நந்தியை வணங்கி இறைவனை காணச் செல்வோம்


இதோ கண்ணுக் கினிய கரும்பீசர்
கரும்புக் கழிகளை ஒன்று சேர்த்தார் போல் தெரிகிறதா இறைவன் திருமேனி
ஐயன் அருள் மட்டும் போதாது, இதோ அன்னையின் தரிசனம்இது கோபுரத்தை ஒட்டியுள்ள சுற்றுச் சுவர்

மேலுள்ள சுவருக்கு எதிர் புறம் உள்ள விநாயகர்
தெற்குப் புறத் தோற்றம்
தெற்குச் சுற்றில் அமைந்திருக்கும் விநாயகர்குருபகவான்

அண்ணாமலையார்
அண்ணாமலையாருக்கு எதிரே இடிந்த நிலையில்...
வடக்குப் புறத் தோற்றம்
இந்த விசித்திர யாளி என்னவென்று தெரிகிறதா, அபிடேக நீர் வெளியேறும் வாய்க்கால்

பைரவர்
தாமரைத் தடாகம்

தடாகத்தில் மலர்ந்திருக்கும் ஒரு தாமரை



இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன. இராஜராஜன் கல்வெட்டுக்கள் ஆறு. குலோத்துங்கன் ஒன்பது. தேதியில்லா கல்வெட்டு ஒன்றும் உள்ளன. 13-10-1222 தேதியிட்ட இராஜராஜன் கல்வெட்டு நீளமானதாகும். அதன்படி, நாடு சுத்தமலிவளநாடு, உள்நாடு வெண்ணி கூற்றம், ஊர் வெண்ணிநகரம்,இறைவன் திருவெண்ணி உடையார் என அறிகிறோம். அந்த இறைவனுக்கு நித்த வினோத வளநாட்டு வீரசோழ வளநாட்டுப் புத்தூரான திருபுவனச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் திருநாமத்துக் காணியாக விட்ட நிலத்தின் எல்லை கூறப்படுகிறது. அந்நிலத்தில் விளைகிற பொருள்களின் அளக்கும் அளவும் கொடுக்கப்பட்டுள்ளது. இனி குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் ``புனல்வாய்த்து`` என்ற தொடக்கம் கொண்டவைகள். கோயிலுக்கு நிலங்கொடுக்கப் பட்ட விவரங்கள் அவைகளில் காணப்படுகின்றன. சுற்று வட்டத்து ஊர்களின் பெயர்களும் ஆட்களின் பெயர்களும் அவைகளில் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று 2-7-1196 ஆம் தேதியுடையது. ஆகவே கி.பி. 12 ஆவது நூற்றாண்டின் முற்பகுதியும் இக்கோயில் சிறந்திருந்த காலமாகும்.


தெற்குப் புறமுள்ள கல்வெட்டு

கீழுள்ளவை மேற்குப் புறமுள்ள கல்வெட்டுகள்



உள்ளமும் உயிரும் குளிர்ந்திடுமே
உலகையாளும் ஈசன் அருளால்

கரும்பீசுவரரின் அருள் தங்களுக்கும் கிட்டட்டும்...






லேபிள்கள்: , , ,

5 கருத்துகள்:

28 ஜனவரி, 2009 அன்று 11:43 PM க்கு, Blogger Dr.K.Subashini கூறியது…

excellent!

 
29 ஜனவரி, 2009 அன்று 5:24 AM க்கு, Blogger Vijay கூறியது…

lovely satheesh

rgds
vj

 
30 ஜனவரி, 2009 அன்று 5:25 PM க்கு, Blogger V. Dhivakar கூறியது…

விசித்திர யாழி - அபிஷேக நீர் செல்லும் பாதையைக் கூட கலை உணர்ச்சியாக கட்டியிருப்பது ஆச்சரியம்தான்.

இந்த வெண்ணிப் பறந்தலைதான் கரிகாலன் மற்ற அரசர்களோடு போரிட்ட இடம் - அப்படித்தானே?

திவாகர்

 
30 ஜனவரி, 2009 அன்று 7:42 PM க்கு, Blogger இரா. சதீஷ் குமார் கூறியது…

ஆம் அதே வெண்ணிப் பறந்தலை தான் திவாகர் சார்! அந்தப் போர்க் களம் இன்னும் இருப்பதாக திரு (PSVP) கூறினார், நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

நன்றி விஜய், நன்றி சுபா...

 
1 பிப்ரவரி, 2009 அன்று 7:06 PM க்கு, Blogger ஏ.சுகுமாரன் கூறியது…

கரும்பீசரை இன்றுதான் பார்க்க முடிந்தது .
நான் வார்த்தைகளில் எழுதியதை வண்ணப் படத்தில் தந்து விட்டீர்கள்
மிக நன்றாக இருக்கிறது .
ஆனால் ஒரு சிறிய தவறு கண்டேன் .
விசித்திர யாழி -எனத் தாங்கள் குறிப்பிட்டிருந்தது
விசித்திர யாளி என இருக்க வேண்டும் .
யாழி என்பது ஒரு இசைக் கருவி ,
யாளி என்பது ஒரு விசித்திர மிருகம் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு