தஞ்சை அருங்காட்சியகம் (Thanjavur Museum @ மணிமண்டபம்)
தென்னிந்திய வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடம் பெற்றிருந்த ஆட்சி சோழ பேரரசின் ஆட்சிதான். அதுவும் முதலாம் இராஜ ராஜன் காலத்திலும், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திலும் தென்னிந்தியாவில் மட்டுமின்றி வட இந்தியாவிலும், இலங்கையிலும், பர்மாவிலும், கடாரத்திலும்(Malaysia) மற்றும் பல தெற்காசிய நாடுகளிலும் புகழ்பெற்றிருந்ததோடல்லாமல் அந்த பகுதியை எல்லாம் தன் ஆட்சி குடைக்குள் வைத்திருந்தார்கள்.
இராஜ ராஜ சோழனின் அருமை பெருமைகளை கல்கியின் பொன்னியின் செல்வனில் காணலாம். இராஜ ராஜ சோழனின் ஆட்சியில் தனது ஆதிக்கத்தின் எல்லையை வடநாட்டிலும், கடல் கடந்தும் விரிவுபடுத்தியதோடல்லாமல் ஆட்சி முறைகளையும், பல்வேறு சட்ட திட்டங்களையும், வரிகளையும் உருவாக்கியும் முறைபடுத்தியும் இருக்கிறார். இவர் காலத்திலும் முதலாம் இராஜேந்திரன் காலத்திலும் கப்பற்படையும் அயல் நாட்டு வாணிகமும் சிறந்து விளங்கியது. திருக்கோவில்களின் எண்ணிக்கை பல்கிபெருகியது, தட்சின மேரு, இராஜ ராஜீச்சுவரம் என்றழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில் முதல் பலநூற்றுகணக்கான கோவில்கள் கட்டப்பட்டன பல கோவில்கள் புதுப்பொலிவு பெற்றன, இந்த கோவில்களுக்கெல்லாம் ஏராளமான நிலங்களும் பொருட்களும் மானியமாக வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதியப்பட்டிருக்கிறது.
மேலும் மற்ற சேர, பாண்டியர்களை விட அதிகமாக வரலாற்று ஆவணங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் சோழர்கள் தான், அவர்கள் ஆட்சி புரிந்த இடமெல்லாம் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மற்றும் பல ஆவணங்களும் கிடைத்தவண்ணம் உள்ளதே இதற்கு சான்று. இந்த வரலாற்று சின்னங்களில் ஒரு சில தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ளது, அவற்றில் பலவற்றை இங்கே நிழல் படமாக காணலாம். இந்த அருங்காட்சியகம் (Museum) தஞ்சாவூர் – திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள மணிமண்டபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டுகளை பற்றிய செய்திகளையும், சோழர்களை பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள ஆவல் கொண்டிருப்பீர்களெனில் நீங்கள் www.varalaaru.com இணைய இதழிலும், www.ponniyinselvan.in இணைய குழும தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
இதோ கண்களுக்கும் உள்ளத்திற்கும் விருந்து…
முதலில் வருவது தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள்.
இராஜராஜ சோழனின் 32 பெயர்கள் மற்றும் அவரது மனைவிகளின் பெயர்கள், இதில் ஏன் இருவரின் பெயரில் மட்டும் மாதேவி இல்லை, மேலும் இராசராசன் என்ற பெயர் 19 ஆம் இடத்தில்தான் வருகிறது.
அடேயப்பா 38 தொழில் வரிகள் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறதெனில் இன்று நாம் திரு. சிதம்பரத்தை குறை கூறி என்ன பயன்!
மொத்தம் 17 வரிகள் பல்லவர் காலத்தில் இருந்ததாக படித்திருக்கிறேன் ஆனால் சோழர் காலத்திலோ 33 வகையான வரிகள் இருந்திருகின்றது.
இங்கு கீழ் வரும் அரசு அதிகாரிகளின் பணிகளும் அவர்தம் பங்களிப்பும் தெரிந்தால் இன்றைய அதிகாரிகளுக்கு உதவியாக இருக்குமல்லவா!
அட இதென்ன நானாழி நெல் ஊதியமா, நாழி என்றால் இரண்டு உரி அதாவாது நான்கு உழக்கு, அப்படியெனில் நாளொன்றுக்கு ஒரு படி நெல் ஆனால் இது எந்த வகையான ஊழியருக்கு கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
கோல்களில் 2-ம் கடிகை களத்துக்கோல் மற்றும் திருப்பாதக்கோல் போன்று பல வகைகள் இருந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஒரு கோல் என்பது 16 சாண்கள்,
18 கோல்கள் - 1 குழி
10 குழிகள் - 1 மா
240 குழிகள் - 1 பாடகம்
20 மா - 1 வேலி
முதற்பராந்தக சோழனை வீரசோழன், மதுராந்தகன் என்று சிறப்பு பெயர் சொல்லி அழைத்தனர், அவரது பெயரால் தஞ்சைக்கு வடக்கே வீரசோழ வடவாறும் திருப்பனந்தாளுக்கு வடக்கே மதுராந்தக வடவாறும் இருந்ததாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன. முதல் இராஜராஜனால் உய்யகொண்டான், சீர்த்திமான் ஆகிய ஆறுகளும், முதலாம் இராஜேந்திர சோழனால் முடிகொண்டான் ஆறும், வீர ராஜேந்திர சோழனால் வீரசோழன் ஆறும், விக்கிரம சோழனால் விக்கிரமனாறும் வெட்டப்பட்டன.
13 தெருக்கள்தான் இருந்திருக்குமா?!
வட இந்தியாவில் பெரிய பெரிய அரசுகள் இருந்ததாக நம்முடைய பள்ளி வரலாற்று நூல்களில் படித்துள்ளோம் ஆனால் அவர்களால் சாதிக்கமுடியாததையெல்லாம் நம்முடைய சோழர்கள் தங்களுடைய கடற்படையினால் சாதித்தார்கள். இலங்கை, கடாரம், தென்மேற்கு தீவுகள் ஆகியவற்றை கைப்பற்றி தங்கள் ஆட்சியை கடல்தாண்டியும்நிலைநாட்டினார்கள். இதோ சேந்தன் திவாகரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்ட கப்பல் பெயர்கள்
சிற்பங்கள்
இது 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பன்றிமுக தெய்வம் (வராகி), சோழபுரத்தில்கிடைத்தது. பெண் தெய்வமாகினும் புயங்கள் மிகவும் வலிமையானதாகதெரிகிறது...
சேத்திரபாலர் 1010 - ஆம் ஆண்டை சேர்ந்த இவர் திருவலஞ்சுழியில் இருந்துகிடைக்கபெற்றார். வாள், வில், சிறிய சூலம் கொண்ட இவரின் தொடையைசுற்றியும், காலை சுற்றியும் பாம்பு இருப்பதை காணலாம்.
Kshetra baalar - 1010 from Thiruvazhanjuli
இது 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சூரியன், கிடைக்கபெற்ற இடம் சிவபுரம்காஞ்சி மாவட்டம். காலைக்கதிரவனை கண்டதும் முகம் மலரும் தாமரை அவன்கைகளில் இருந்தும் மொட்டாகவே இருப்பதேன் வெட்கமா
இது பைரவர் கோயில் தேவராயன்பேட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கி.பி. 1000 மாவது ஆண்டை சேர்ந்தவர். இவரும் சேத்திரபாலரும் ஒன்றுதான்ஆனால் இவருடைய வாகனம்தான் காணவில்லை
Bairavar - 1000AD - Koyil Devaraayanpettai
இது யாரென்று தெரியவில்லை, ஒருவேளை சமணரிடம் இருந்து மீட்டெடுத்தபாண்டியனும், மங்கையர்கரசியாரும், சம்பந்தருமாக இருக்குமோ? இதோவலப்பக்கம் நிற்பவரின் கைகள் குவிந்திருப்பதை பாருங்கள் கைக்குள் இருப்பதுபொற்தாளம்தானே.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு....
இது வடவாயில் செல்வி, காளி கிடைத்த இடம் பழையாறை 10-ஆம்நூற்றாண்டை சேர்ந்த சிற்பம்
Vadavaayil selvi-kaali-1oth century- from Pazhayaarai
இது திருமால் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கிடைக்கபட்டதுஇளையபெருமால் நல்லூர் அரியலூர் மாவட்டத்திலிருந்து. மாலவன் கைகளின்சங்கும் சக்கரமும் நம் உள்ளத்தையும் உடலையும் காக்கட்டும், அவனதுபுன்னகை நம் சோர்வை நீக்கி புத்துனர்வு ஏற்படட்டும்.
Thirumaal-vishnu-1oth century - from Ilaiyaperumaal nallur Ariyalur District
வலம்புரி விநாயகர் 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவர் திருப்பூந்துருத்தியைசேர்ந்தவர். இவரின் இடக்கரம் எதையோ தடவிக்கொண்டிருப்பது போல்தெரிகிறதே அது என்ன அவருடைய வாகனமா
Valamburi vinayagar-10th century- from Thiruppoonthuruththi
இது சோழர்கால காசுகளும் உண்டியல்களும். இதில் மிகவும்பழமைவாய்ந்தமையாக கருதப்படுவது உத்தமசோழன் காலத்துபொற்காசுகள்தான் இதில் நடுவில் புலி உருவமும் வலப்பக்கத்தில் மீன்உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். வட்டவடிவமான இந்த நாணயத்தில்உத்தமசோழன் பெயர் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். காசுகளின்அளவுமுறை
2 குன்றிமணிகள் - 1மஞ்சாடி
20மஞ்சாடிகள் - 1கழஞ்சு
2காசுகள் - 1மாடை
1காசு - அரை கழஞ்சு
20குன்றிமணிகள் - 1காசு
இது வீணாதார தட்சிணாமூர்த்தி, காலம் கி.பி.900 மாவது ஆண்டு, கிடைத்த இடம்திருவேதிக்குடி. தட்சிணாமூர்த்தியில் வியாக்கியான, ஞான, யோக, வீணாதாரஎன்று நான்கு வடிவங்கள் உள்ளதாக கேள்வி. வீணையின் நாதத்தால் ஞானத்தைபரப்பும் அவரின் உடல் நளினமும் வசீகரிக்கும் புன்னகையும் உள்ளத்தைகொள்ளைகொள்கின்றன
veenathaara Dhakshinamurthy - AD900- from Thiruvethikkudi
இவர் யாரென குறிப்பிடப்படவில்லை. தியான நிலையில் இருப்பதாலும் மூன்றுதலைகள் தெரிவதாலும் இவர் பிரம்மாவாக இருக்கலாமென்று கருதுகிறேன்.
இது உமாசகித மூர்த்தியாகத்தான் இருக்கவேண்டும், இதோ அய்யனின் கைகளில்பரசும், மானும். ஈசன் தேவியின் பக்கம் பார்ப்பதாக உள்ளதே அன்னையின் மீதானகாதல் ஈர்க்கிறதோ
இதுவும் ஒரு வடவாயில் செல்வியோ அட என்ன ஒய்யாரமாக காலை தூக்கிவைத்துக்கொண்டு அதன் மீது கையை வைத்துக்கொண்டிருக்கிறார்
இது 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர், கிடைத்த இடம் உப்பிலியப்பன்கோயில். பைரவர் பொதுவாக சிவாலயங்களின் பாதுகாவலர், பூசாகாரியங்கள்முடிந்தவுடன் இரவு கோயிலை பூட்டியபின் சாவியை இவரிடம் வைத்து சென்றுகாலையில் வந்து எடுத்து கோயிலை திறப்பது வழக்கம்.
இது மகாவீரர், காலம் 10ஆம் நூற்றாண்டு, கிடைத்த இடம் கரந்தை-தஞ்சாவூர்
Mahaveerar-10th century- from karanthai, Thanjavur
இது 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருமால், கிடைக்கப்பெற்ற இடம் சிதம்பரம். அழகிய மால் புன்னகை கண்டதுமே அடையும் மனம் பரவசமே
Thirumal (Vishnu)- 12th century- from Chidhambaram
சந்திரசேகரர் பார்வதி 1000 மாவது நூற்றாண்டை சேர்ந்த இவர்கள்திருச்சோற்றுத்துறையை சேர்ந்தவர்கள். திங்கள் சூடிய தேவன் அருள்திக்கெட்டும் பரவட்டும்.
Chandrasekarar with Parvathi-1000AD-Thiruchotruthurai
இந்த திருமால் 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் மதுரையை சேர்ந்தவர். பாற்கடலுறை மணிவண்ணா உன் பாடல்கள் தித்திக்கும் கற்கண்டா!
Thirumal (Vishnu) - 13th century- from Madurai
சண்டிகேசுவரர் 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் திருவாலம்பொழிலைசேர்ந்தவர். 63 நாயன்மார்களில் ஒருவர் சிவாலயத்துக்குச் சென்றால் இவரைவணங்கியபின்னேதான் முழு பலன் கிடைக்கும் என்பது கருத்து.
Chandikesuvarar-1oth century- from Thiruvaalampozhil
தவ்வை (மூத்தவள்) - 10ஆம் நுற்றாண்டு கும்பக்கோணத்தை சேர்ந்தவள். ஓருகாலத்தில் திருமகளுக்கும் மேன்மை பெற்றிருந்தவள் பெருமை குறைந்ததுஎந்தகாலம் என்று தெரியவில்லை.
Dancing girl-11th century- Thiruchinnampoondi
16ஆம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளாம்பெரம்பூர் தட்சிணாமூர்த்தி
Dhakshinamurhty-16th century- Vellaam Perambur
Vinayagar-10th century-Koyil Devaraayanpettai
பெண்காட்டும் உருவான் எனப்படும் அர்த்தனாரீசுவரர், 12ஆம் நூற்றாண்டைசேர்ந்த இவர் கிடைத்த இடம் வீராக்கண் தஞ்சாவூர் மாவட்டம். அட இதென்னகாளையின் தலை இடப்பக்கமாக தேவியின்உள்ளது
மூச்சைபிடித்து ஊதும்போது ஊதிப்போகும் முகத்தையும் பிதுங்கும் விழிகளும்தெளிவாக தெரிகிறது அல்லவா..
ஆடல் அழகன் அன்னையுடன், சிற்பம் சிறியதுதான் ஆனால் அதில் உள்ள தெளிவான வடிவங்கள் அற்புதம்
சிவனடியாரோ நாயன்மாரோ
திருமால் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தஞ்சை சிற்பம் – ஆஹா வெண்சாமரம் குடையோடு வீற்றிருக்கும் மால்..
Thirumal (Vishnu) – 10th century - Thanjavur
சந்திரசேகரர் மான் மழுவுடைய பவளமேனியான் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கிடைத்த இடம் செந்தலை
Chandrasekarar – 11th century - Senthalai
அடி முடி காணா அண்ணல் திருவலஞ்சுழியை சேர்ந்த இவர் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்.
அயனும் மாலும் முடி அடி காணமுடியாத கடவுள் உருவம், கடவுளர்க்கு பாடம் சொல்வதுபோல் மெய்ஞானம் அறியா அடியாருக்கும் அறியவைக்கும் இறைவன்.
Lingothbhavemurhti – 11th century – Thiruvalanchuli
தவ்வை (மூத்தவள்) திருமேற்றளிகையில் கண்டெடுக்கப்பட்ட இவர் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்.
Jyestha- 10th century – Thirumetralikai
இது 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த அடியார் கிடைத்த இடம் திருப்பராய்த்துறை திருச்சி மாவட்டம்
Devotee – 10th century- Thirupparaaithurai (Trichy Dt.)
அகத்தியர் – 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கிடைத்த இடம் திருவலஞ்சுழி
காவிரி தந்த குறுமுனியே நீ தந்த தமிழ் பலா கனியே…
11 ஆம் நூற்றாண்டு சண்டிகேசுவரர் சிதம்பரத்தை சேர்ந்தவர்
தோள் தொடும் குண்டலங்கள் வலப்பக்கமாக சற்றே சாய்ந்த முகம் அருள் பொழியும் புன்னகையுடன் வலக்கையும்…
Chandikesuvarar – 11th century - Chidambaram
இடப்பக்கம் உள்ளது பழையாறை செங்கல் வலப்பக்கம் உள்ளது கங்கைகொண்டசோழபுர செங்கல்
Left – Pazhaiyaarai Brick
Right – Gangaikondachozhapuram Brick
சுடுமண் கலையம் – பழையாறை (Pot from Pazhaiyaarai) – 10th century395
11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரும்பு ஆணிகள் கிடைக்கப்பெற்ற இடம் கங்கைகொண்டசோழபுரம்
Nails – Gangaikondachozhapuram – 11th century

நன்றி: தொல்லியல் ஆய்வுத்துறைலேபிள்கள்: Raja raja cholan museum, Thanajvur museum





