திருவிடைக்கழி (Thiruvidaikkazhi)
குன்றிருக்கும் இடம் மட்டும் குமரன் இருக்கும் இடமல்ல, குரா மரம் (Webera corymbosa, Bottle brush tree) இருக்கும் இடமும் குமரன் இருக்கும் இடமே. இந்த திருக்கோவில் திருக்கடையூர் இருந்து 6 கி. மீ. தூரத்தில் உள்ளது. சூரபத்மன் வதம் செய்தபின் சுறா வடிவமெடுத்து மறைந்த சூரபத்மனின் புதல்வன் இரண்யனை வதம் செய்து தன் மீதான சாபம் தீர ஈசனை நோக்கி தவம் செய்த இடம் இந்த திருக்கோவில். தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் தலம். இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.
இந்த தளத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு, இங்குதான் தெய்வானைக்கும் முருகப்பெருமானுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாம். இதற்கு சான்றுபோல் தெய்வானை சந்நிதியில் உள்ள அவரின் சிலையில் முகம் முருகப்பெருமானை நோக்கி சற்றே நாணத்துடன் தலை சாய்த்து இருப்பதுபோல் காணப்படுகிறது.
இத்தளத்தின் தல விருட்சம் குரா மரம், இந்த மரத்தின் இலைகளுக்கு விஷமுறிவு சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.
மிகவும் அமைதியான ஆலயம், எனக்கு மிகவும் பிடித்தமான ஆலயமும் கூட, இங்குள்ள அர்ச்சகரும் மிக நல்ல முறையில் சேவை செய்துவருகின்றார்.
முன் கோபுரம்




குமரன் தன் சாபம் நீங்க தந்தையை பூசிக்கிறார்

இது பத்மாசூரன் வதைபடும் காட்சி , ஒரு பக்கம் சேவலாகவும் மறு பக்கம் மயிலாகவும் மாறிய பத்மாசுரன்...

பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா, முருகா இதோ நீ கேட்ட ஞானப்பழம்...

சுறாமீனாக மாறிய இரண்யனை வதைக்கும் வில்லேந்திய வேலன் ...

ஆனந்த கூத்தாடும் நாதா தில்லை அம்பலவாணா...

காயாத கானகத்தே மேயாத மான்... மேயாத.... வள்ளியை வசப்படுத்த வரும் வேட வேடமணிந்த வேலன்...

இது அகத்தியரா அல்லது அருனகிரியா?? அட இது என்ன பச்சை கிளி அருகில் இது நிஜக்கிளி... கிளி வடிவம் எடுத்த கலிகால அருணகிரியோ...

லேபிள்கள்: திருவிடைக்கழி, kura tree, Thiruvidaikkazhi
