செவ்வாய், 14 டிசம்பர், 2010

பல்லவக் கலைச் செல்வங்களைத் தேடி ஒரு பயணம் (பாகம் - 2)

பணிச்சுமையாலும், இடமாற்றத்தினாலும், காலதாமதமாக பதிவதற்கு மன்னிப்பு கோரி பதிவின் இரண்டாம் பாகத்தை துவக்குகின்றேன்...

மண்டகப்பட்டு குடைவரையை பார்த்தபின் மீண்டும் சுமார் 6 கி.மீ அதே செஞ்சி விழுப்புரம் சாலையில் பயணித்து, அனந்தபுரம் வழியாக பனைமலையை அடைந்தோம். ஆஹா! என்ன ஒரு இரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்!

பல்லவ சிற்பக்கலைக்கு முன்னேற்றம் கொடுத்து அதனை அடுத்த நிலைக்கு கொண்டுச் சென்ற இராஜசிம்ம பல்லவனின் கற்றளிதான் இந்த பனைமலை தலகிரீஸ்வரர் ஆலயம். சிற்பங்களுக்கு மட்டுமல்ல ஓவியத்திற்கும் புகழ் பெற்ற ஒன்று. ஒரு புறம் பெரிய ஏரி, மறுபுறம் பசுமையான வயல்வெளி, நடுவில் குன்று அதன் மீது ஆலயத்தை அமைத்த இராஜசிம்மன் நல்ல ரசிகன்தான்!

மலையைப் பார்த்து சற்றே மலைத்துத்தான் போனோம். ஆனால் கண்ணில் தெரிந்த ஆலயமும் அதன் சிறப்பும் மேலே வா...வா... என்றழைப்பதாக தோன்றியதால் கிடைத்த புத்துணர்ச்சியில் இயற்கையழகை ரசித்துக் கொண்டே மேலே ஏறினோம்.


இதோ ஆலயம் நம் கண்முன்னே

அழகான சுனையில் அடுக்கடுக்காய் அலைகள்

இதோ ஆலயத்தின் அருகில் வந்துவிட்டோம்

கம்பீரமான விமானம்

வடபுறத் தோற்றம், இந்தச் சுற்றில் கருவறைக்கு வலப்புறம் வெளியே உள்ள அறையில்தான் உமையின் சிறந்த ஓவியம் அழிந்து வரும் நிலையில் உள்ளது

இதோ அந்த ஓவியத்தின் காட்சி, சிவ நடனம் தெரிகிறதா என்று பாருங்கள்



அறையின் மேற்புறம்

ஒய்யாரமாய் நிற்கும் உமை

உமையின் மேற்பாதி உருவம்

கீழ்ப்பாதி உருவம்

மற்றுமொரு ஓவியம்

யானைபோல் தெரியும் உருவம்

இடப்புற துவாரகர்...ம்ம்ம் தலைக்குப் பின் தெரியும் பல்லவர் சிறப்பு சூலம் குறிப்பிடத்தக்கது (கீழே உள்ள சூலம் யாரோ திருஷ்டிக்காக வைத்திருக்கிறார்கள் போலும் :-) )

வலப்புற துவாரபாலகர்

நான்முகன்

கருவறையின் உள்ளே லிங்கத்திற்கு பின்புறம் உள்ள சோமஸ்கந்த புடைப்புச் சிற்பம்

அழகிய வரிவடிவமுடைய கிரந்த கல்வெட்டு 

ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அலைமகளுடன் திருமால்

இங்கிருக்கும் சிற்பங்களையும், ஓவியங்களையும் பற்றி விளக்க பலப் பதிவுகள் வேண்டும். அந்தப் பணியை நம் poetryinstone-டம் விட்டு விடுவோம். 

இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் நம் அமெரிக்க வானொலி அறிவிப்பாளர் ஸ்ரீ ஸ்ரீ

குன்றின் மீதிருந்து கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

ஆதவன் தன் கடமையை முடித்துக் கொள்ளும் காட்சியை இரசித்துக் கொண்டே சென்னையை நோக்கி பயணிக்கின்றோம்

கலையுணர்வு கொண்டு இரசித்திடுங்கள், கருணையுள்ளம் கொண்டு அழிவிலிருந்து காக்க உதவிடுங்கள். 

லேபிள்கள்: , , , ,