கணபதி அக்ரஹாரம் (Ganapathi Agraharam)
கணபதி அக்ரஹாரம் இந்த ஆலயம் திருவையாறில் இருந்து 9 கி.மீ தொலைவில் சுவாமிமலை செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கணபதி அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் மேலும் ஒரு காலத்தில் இருந்த பெரும் பஞ்சத்தை நீக்க கவுதம முனிவரால் பூசிக்கப்பட்டு பஞ்சம் தீர்ந்து வளம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகின்றது. இந்த ஆலயம் கணபதிக்காண தனி ஆலயம், இங்கு சங்கடஹர சதுர்த்தி முதலான நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறும் இந்த நாட்களில் இந்த ஆலயத்தை சுற்றி இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கணபதியின் அருளைபெற கூடுவர்.
வினாயகனே விக்கினங்களை தீர்ப்பவனே
வல்லமை தரும் கடவுளே
செல்வங்கள் தரும் நாயகனே
ஆணவம் அகற்றும் ஆண்டவனே
உன்னை உளமாற வழிபடுகிறோம்
உலகை காக்க வேண்டும் கணநாதா
வல்லமை தரும் கடவுளே
செல்வங்கள் தரும் நாயகனே
ஆணவம் அகற்றும் ஆண்டவனே
உன்னை உளமாற வழிபடுகிறோம்
உலகை காக்க வேண்டும் கணநாதா
மரத்தால் செய்யப்பட்ட கணபதி உருவங்கள்

லேபிள்கள்: கணபதி அக்ரஹாரம், ganapathi agraharam