பொன்னியின் செல்வருக்கு சதய விழா
நம் பொன்னியின் செல்வரான இராஜராஜ சோழருக்கு 1023 வது சதய விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
அலையென திரண்டுவந்த மக்கள் வெள்ளம், திருமுறை உலா, சோழர் வரலாறு பற்றிய சொற்பொழிவு, பெருவுடையாருக்கு 47 வகை அபிஷேகம் என விழா சிறப்பாக நடந்தேறியது. ஒளி வெள்ளத்தில் மிதந்த பெரிய கோவில் இராஜராஜனின் பெருமையை பறைசாற்றியது. மக்கள் மிக ஆர்வமுடன் பெருவுடையாரை வழிபட்டு, சோழர் வரலாற்றையும், திருமுறைகளையும் கேட்டுக் கொண்டிருந்தது நம் பொன்னியின் செல்வர் மீது அவர்கள் வைத்திருந்த அன்பை காட்டியது.
சதயம் இராஜராஜரின் பிறந்த நட்சத்திரம் என்பது நாம் அறிந்ததே, இந்த திரு நாளில் பற்பல சாதனைகள் புரிந்த மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு தஞ்சை, திருவிடந்தை, திருவானைக்கோவில் ஆலயங்களில் ஒரு வாரத்திற்கு பெரும் விழா அந்நாளில் நடைபெற்றதாம்.
இதோ சதயவிழா காட்சிகள்
லேபிள்கள்: 1023rd sathayam festival, இராஜராஜன் பிறந்த நாள், சதய விழா, rajaraja cholan birth day