"ஹரிதாசன் எனும் நான்" - திவாகர்
அரசியலும், காதலும், தேசபக்தியும், தர்மமும், கடவுள் பக்தியும் என பல்வேறு கூறுகளையும் மனதை முழுவதும் ஆக்கிரமிக்கும் வகையில் அமிர்தமாய் கலந்து, மனதை சற்றே ஐநூறு வருடங்களுக்கு பின்னால் சுகமாக பயணிக்கவைத்து இரண்டு நாட்களாக இவ்வமய இடர்நிலையை முழுமையாய் மறக்கவைத்த நாவல் "ஹரிதாசன் எனும் நான்".
கிருஷ்ணதேவராயர் என்ற பெயரை கேட்டாலே மனதில் மகிழ்ச்சி பொங்கும், காரணம் தெனாலிராமன் கதைகள். ஆனால் அவரைப் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் மிகவும் குறைவுதான். கதைகளிலும், திரைப்படங்களிலும் இருந்து தெரிந்து கொண்ட விஷயங்கள் மட்டும்தான். அவை எல்லாம் முழுவதும் உண்மையாக இருக்காது என்று அறிந்திருந்தாலும், நிச்சயம் கிருஷ்ணதேவராயர் மாபெரும் நன்மையைத்தான் நம் சமுதாயத்திற்கு செய்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் எப்பொழுதும் உண்டு.
"ஹரிதாசன் எனும் நான்" திவாகர் சாரின் எழுத்து என்னும் மகுடத்தில் ஒரு வைரமாய் மிளிர்கிறது என்றே நான் நம்புகிறேன். இதுவரை நான் படித்த நாவல்கள் போல் அல்லாமல், ஹரிதாசனையே கதைச்சொல்லியாக மாற்றி மிகவும் விறுவிறுப்பாக, நுட்பமாக, ஏராளமான தகவல்களோடும், அதே சமயம் இடைநிறுத்தத் தோன்றாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையிலும் அற்புதமாக எழுதியிருக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
குறைவான பாத்திரங்களைக் கொண்ட ஒரு நிறைவான கதை. சோழ, பாண்டியர்களையே சுற்றிச் சுற்றி வந்த நம்மை திராவிட நாட்டின் மற்ற பகுதிகளையும், அதனை ஆண்ட அரசர்களையும், ஹம்பி உருவான வரலாறும், சனாதன தர்மத்தின் வழி நடக்கும் அரசின் மற்றும் மக்களின் நன்மைகளையும், கிருஷ்ணதேவராயரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்த இடர்களையும், ஹரிதாசன் வழியே மனதில் எளிதாய், ஆழமாய் இந்த நாவல் பதிய வைத்துவிடுகிறது.
நாவல் முடியும் தருணம் அதற்குள் முடிந்து விட்டதே, இன்னும் தொடரக்கூடாதா, வியாச தீர்த்தரின் வழிகாட்டுதலில், கிருஷ்ணதேவராயரின் ஆட்சிப் பெருமைகளை தொடரக்கூடாதா என்று மனதை ஏங்க வைத்துவிடுகிறது இந்த நாவல். படித்து முடித்த பின்பும் எனக்குள் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை, அத்தோடு எதிர்ப்பார்ப்பும் கூடிவிட்டது. மாதங்கியின் காதல் திருமணம் நடந்ததா, மைனாவதியின் ஆசை நிறைவேறியதா என்றும் மனதில் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது.
மேலும், குமாரபர்வதம் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்ற என் பலவருட வேட்கையை மேலும் பன்மடங்கு தூண்டிவிட்டு விட்டது இந்த நாவல்.
திவாகர் சார் இத்தோடு நிற்காமல் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெருமைகளை மேலும் தொடர்ந்து எழுத வேண்டுமென்பது எனது தாழ்மையான கோரிக்கை. சொந்தவீட்டையும், அடுத்தவீட்டையும் ஆழமாக அறிந்த அவரைவிடவும் கிருஷ்ணதேவராயரை பற்றி வேறுயார்தான் சிறப்பாக கூறிவிட முடியும்!

லேபிள்கள்: கிருஷ்ணதேவராயர், சரித்திர நாவல், திவாகர், விஜயநகர பேரரசு, ஹரிதாசன்