மீண்டும் சித்திரையில் தமிழ் புது வருடம்
ஒரு வழியாக தமிழ் புது வருட கொண்டாட்டங்கள் இனிதே முடிந்தது மகிழ்ச்சி. நல்ல செய்திதான் ஆனால் இதற்காக மூன்று வருடங்கள் மனக் குழப்பத்தில் ஆழ்த்தியதற்காண உண்மைக் காரணம் என்னவென்றுதான் புரியவில்லை!
விவரம் தெரிந்த நாள்முதல் கொண்டாடிவந்த புத்தாண்டை திடீர் என்று மாற்றினால் அதை மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் அவ்வளவு விரைவில். அதுவும் என்ன காரணம் என்று தெளிவுபட யாரும் எடுத்துக் கூற முடிந்ததா? இல்லையே, அப்படியிருக்க எதற்காக மாற்றவேண்டும்? நமக்கெல்லாம் இது ஒரு படிப்பினைதான். தமிழ் அறிஞர்கள் சென்ற நூற்றாண்டில் செய்த ஆய்வின் படி தை மாதத்தில்தான் என்று ஏதோ காரணம் சொல்லப்பட்டது. ஏன் தமிழறிஞர்களுக்கு தவறே ஏற்படாதா? அவர்கள் ஒன்றும் வரலாற்று அறிஞர்கள் இல்லையே!
தஞ்சையின் பெரியக்கோவிலைக் கட்டியது கரிகாற்சோழன் தான் என்று கல்வெட்டை படிக்கும் வரை சொல்லப்பட்டது. அதற்குப் பின் அதைக் கட்டியது ராஜராஜச் சோழன் தான் என்று அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அது போல் ஏதேனும் சான்று இருந்திருந்தால் அனைவரும் புது வருட மாற்றத்தினை நிச்சயம் ஏற்றுக் கொண்டிருந்திருப்பரல்லவா!
சங்க இலக்கியங்களில், கல்வெட்டுகளில், மற்ற இலக்கியங்களில் எங்குமே புது வருடக் கொண்டாட்டம் என்று இல்லையென்று சொல்கிறார்கள். இந்திர விழா தான் புத்தாண்டு என்று ஒரு சாரரும், பாவை நோன்புதான் என்று மற்றவரும் கூறினர். அப்புறம் ஏதோ வானிலைக் கணக்கு, நட்சத்திரக் கணக்கு என்று எல்லாம் சொன்னார்கள். ஆனால், ஒன்றிலுமே தெளிவில்லை!
விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நாள், எங்களுடைய குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுக்கு ஆங்கிலம் தான் வாழ்வை அளிக்கும், தமிழால் ஒரு உபயோகமும் இல்லை, ஆகவே அது தேவையே இல்லை என்று ஒரு சாரார் வாதிட்டனர். அது மட்டுமல்ல, உலகமயமான இன்றைக்கு ஏராளமானோர் மேற்கத்திய கலாச்சாரத்தில் கவர்ந்திழுக்கப்பட்டு தமிழ் புத்தாண்டு என்பதையே மறக்கும் நிலையில் இருக்கும் பொழுது இந்த மாற்றம் தேவையா? ஜனவரி 1க்கு இருக்கும் வரவேற்பு சித்திரை 1க்கு இருக்கிறதா?
தமிழ் புத்தாண்டு என்று தனியே ஒன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையிலேயே இப்படி என்றால், அது தை மாதம் பொங்கலோடு இணைந்துவிட்டால் அதை பின்வரும் சமுதாயம் மொத்தமாக மறந்துவிடுவார்களே என்ற எண்ணம் எப்படி தோன்றாமல் இருந்தது!
தமிழ் ஆண்டுகளின் பெயர் தமிழில் இல்லை என்று சொல்பவர்கள், எது தமிழ் வார்த்தைகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். காரணம், திருக்குறள் கூட உரையின்றி சாமானியர்களால் படிக்க முடியாது என்பதற்கு அரசு பாடப் புத்தகங்களே சான்று. நம்மால் படிக்க முடியவில்லை, நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அதில் உள்ளவை தமிழ் வார்த்தைகள் இல்லை என்று கூட சுலபமாகச் சொல்லிவிட முடியும். நதிமூலம், ரிஷிமூலம் யாருக்குத் தெரியும்! அய்யகோ ’ரிஷி’ தமிழ் வார்த்தை இல்லை! வடமொழிப் பழமொழிகளை சொல்லக்கூடாது என்று தடை போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எதற்கு இப்படி ஒரு பழங்கதைப் பேச்சு என்று எனக்கே தோன்றுகிறது. இருந்தாலும் மனதில் உள்ளதை உங்களுடனும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றும் மனம் சொல்கிறது. வருங்காலத்தில் மீண்டும் ஒரு குழப்பம் வராமல் இருக்க இறைவனை பிரார்த்திக் கொள்வோம்.
எப்படியே, ஒரு வழியாக அரசாங்கமே சொல்லிவிட்டது. இனி தமிழ் புத்தாண்டு சித்திரையில் தான் என்று. இது மீண்டும் மாற்றப்பட்டு குழப்பாமல் இருந்தால் நன்று.
இந்த 'நந்தன’ புது வருடத்தில் அனைவரும் வளமாக, நலமாக, நல்ல மன தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

லேபிள்கள்: தமிழ் புத்தாண்டு, tamil new year