வியாழன், 23 அக்டோபர், 2008

ஈழத் தமிழர்க்காக இறைஞ்சிடுவோம்

மாற்றுத்துணி எடுக்க மறந்து

சொத்து சுகம் தனை துறந்து

சொந்தங்கள் யாவும் இழந்து

சோற்றுக்கும் வழியின்றி

நோய் தீர்க்க மருந்தின்றி

தாய் மண்ணிலேயே அகதியாய்

சேயிழந்த தாய்களோடு

தாயிழந்த சேய்களோடு

இரத்தச் சேறு படிந்த உடைகளோடு

யுத்தப் பகை தந்த வெறுப்போடு

சொச்ச சொந்தம் காக்கும் துணிவோடு

உயிர் காக்கும் சோதரர்களுக்காக

அதிகாலை விழித்தெழுந்து

எண்ணெய் நன்றாய் தேய்த்துக்கொண்டு

கங்கை நீரால் குளித்துவிட்டு

கடவுளரை மனதில் நினைத்து

தீபங்கள் ஒளிரச் செய்வோம்

உற்றார் உறவினர் நண்பர்களோடு

அண்டை அயலார் ஒன்று கூட

ஈழத் தமிழர்க்காக இறைஞ்சிடுவோம்

இயன்றவரை உதவிடுவோம்

ஒற்றுமை உணர்வுகள் ஓங்கிட

நல்லெண்ணங்கள் நாளும் வளர்ந்திட

பகையுணர்வு மாறி நட்பு வளர்ந்திட

அழகு ஈழம் மீண்டும் செழித்திட

ஆண்டவனை வேண்டிடுவோம்

ஈழத்தமிழர் மகிழ்ச்சியை மீட்டி

தினமொறு தீபாவளி கொண்டாடுவோம்

லேபிள்கள்: , ,

தீபாவளி


அதிகாலை விழித்தெழுந்து

எண்ணெய் நன்றாய் தேய்த்துக்கொண்டு

கங்கை நீரால் குளித்துவிட்டு

கடவுளரை மனதில் நினைத்து

தீபங்கள் ஒளிரச் செய்வோம்

வெடிகள் வெடித்து மகிழ்ந்திடுவோம்

உற்றார் உறவினர் ஒன்று கூட

அண்டை அயலார் மனம் நெகிழ

இனிப்புகள் பகிர்ந்து மகிழ்ந்திடுவோம்

இனிய தமிழால் வாழ்த்திடுவோம்

ஒற்றுமை உணர்வுகள் ஓங்கிட

நல்லெண்ணங்கள் நாளும் வளர்ந்திட

உள்ளிருள் மறைந்து ஒளி பெற்றிட

அண்டமெங்கும் அன்பு மலர

உயிர்களெல்லாம் இன்புற்றிருக்க

உலகாளும் இறைவனை வேண்டி

தினம் ஒரு தீபாவளி பெற்றிடுவோம்

தீபங்கள் ஒளிரட்டும்

தீய எண்ணங்கள் அழியட்டும்

நன்மை நாளும் பெருகட்டும்

நாடும் வீடும் செழிக்கட்டும்

என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

லேபிள்கள்: , ,